A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Nov 2012

Nammalvar- Hymns for the Drowning - A.K.Ramanujan

உபயவேதாந்தம் என வேதம் மற்றும் வேதாந்தத்தின் சாரமாகச் சொல்லப்படும் பிரபந்தங்கள் எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பரம்பொருளான விஷ்ணுவைப் போற்றி பாடப் பெற்றவை. தமிழின் மிகச் செறிவான கவிதைகளாகவும், பக்தி ரசத்தின் தொடக்கமாகவும் கருதப்படும் இப்பிரபந்தங்களை ஜகத்ரட்சகன், ஸ்ரீராம பாரதி போன்ற பலர் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அவற்றுள் மொழியியலாளர் .கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த நூறு பிரபந்தங்கள் கவித்துவ அழகில் உயர்ந்ததாகவும், மொழியில் செறிவானதாகவும், மூலத்தின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமாகவும் அமைந்துள்ளதை பலர் சுட்டிக்காட்டியுள்ளர்.
Hymns for the Drowning - பரம்பொருளான விஷ்ணுவின் மீது `ஆழ்ந்து` பக்திகொண்ட ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில், இந்த புத்தகத்தில் நம்மாழ்வாரின் தேர்ந்தெடுத்த பாசுரங்களை மட்டும் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளார். ஓசை நயம் மாறாமல், பொருள் சார்ந்த மயக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் அமைந்திருப்பதால் பெரும் கவிதை அனுபவத்தை இந்த மொழியாக்கம் நமக்கு அளிக்கிறது. இவற்றை வெறும் மொழியாக்கம் எனச் சொல்லமுடியுமா? ஒரு வகையில், தமிழின் செறிவான சங்கப்பாடல்களையும், தமிழரின் பண்பாட்டு குறியீடுகளையும், பாரதப் புராணங்கள் இதிகாசங்களையும் சேர்த்தமைத்து ஒரு பெரும் அனுபவப் பகிர்வாகப் படிப்பவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அவ்வகையில், இப்பாடல்களைப் படிப்பவர்கள் கவிதை நயத்தில் மட்டும் மயங்குவதில்லை, பண்டைய பாரதத்தின் வாழ்வு முறையும், சமூகத்தின் குறியீடுகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்கள்.


திருவாய்மொழி ஆயிரத்தை, பத்து பத்தாகப் பத்து தொகுப்புகளில் பிரித்துள்ளனர். முதல் நூறு பாடல்களை முதல் பத்து என வகுத்து, பத்து பத்தாகப் பிரித்துள்ளனர். கீழுள்ளது, மூன்றாம் பத்தில் உள்ள ஏழாம் தொகுப்பின் ஒன்பதாம் பாடல்.
The four castes
uphold all clans;
go down, far down
to the lowliest outcastes
of outcastes

if they are the intimate henchmen
of our lord
with the wheel in his right hand;
his body dark as blue sapphire,

then even the slaves of their slaves
are our masters
(3.7.9)
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே.
 
வேளாளர் குடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் புளியமரப் பொந்தில் வாய்பேசாது கண் திறவாது யோக நிலையில் காத்திருந்தார். கங்கைக் கரையில் வைணவக் கோவில்களில் பக்தி செய்துகொண்டிருந்த மதுரகவி, தென் திசையில் மின்னிய நட்சத்திரத்தைத் தொடர்ந்து நம்மாழ்வார் வாழ்ந்த தென் திருகூர் நகரை அடைந்தார். நட்சத்திர ஒளி புளியமரத்திலிருந்து வருவதைப் பார்த்து தியானித்து ஒரு கல்லை அவரருகில் போட்டு யோகத்தைக் கலைத்தார். கண் விழித்த நம்மாழ்வாரிடம், `செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்` எனும் சந்தேகத்தைக் கேட்டார். `அத்தைத் தின்று அங்கே கிடக்கும்` என நம்மாழ்வார் ஆன்மாவின் அழியாமை தத்துவத்தையும், ஆன்மாவுக்கு பரம்பொருளோடு இணைந்துகொள்வதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்பதை பதிலாகச் சொன்னதைக் கேட்டுஅவரையே குருவாக ஏற்றுக்கொண்டார்.  திருவாய்மொழி, திருத்தாண்டகம், திருவாசிரியர், பெரிய திருவந்தாதி எனும் பாடல்களை மதுரகவியிடம் நம்மாழ்வார் பாடினார். வேறேந்த தெய்வமும் தமக்கு வேண்டாமென மதுரகவியும் நம்மாழ்வார் மீது கண்ணின்நுண் சிறுதாம்பு எனும் பாடல்களைப் பாடினார். இது வைணவ வரலாற்றில் வரும் நிகழ்வு.

சங்கப்பாடல்களான குறுந்தொகை, அகம், புறம் போன்றவை வெளிப்படுத்தும் உணர்வுகளைப் போலவே ஒரு தனியொருவன் பரம்பொருளோடும் பிரபஞ்சத்தோடும் அடையும் இணக்க/பிணக்க நிலைகளைப் பிரபந்தங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு தலைவி தலைவனுக்காக வாடுவதும், பிரிவு போன்ற உணர்வுகளை திணை ஒழுக்கங்களாகவும், திணை சார்ந்த காட்சிப்பொருட்களை மனநிலைகளாகவும்  சங்கப் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. தலைவனின் வீரம், தலைவியின் பிரிவு, தாயின் பரிவு போன்ற `மூன்றாம்` நபர் சார்ந்த உணர்வுப் பரிமாற்றங்கள் தோழி வழியாகவும், `பார்வையாளன்` வழியாகவும் பாடல்களில் வெளிப்படும். பொதுவாக, ஒரு பாணன்/விரலி நிகழ்வுகளைப் பாடி, ஆடிக் காட்டுவது போல அமைந்துள்ளதால் இவை ஒரு நிகழ்த்தும் கலையாக அமைய சாத்தியமுள்ளதாக ராமானுஜன் தெரிவிக்கிறார். ஆனால், பக்தி காலத்தில் வெளியான பிரபந்தங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை பரம்பொருள் `ஆட்கொண்டதால்` உருவானவை. இங்கு மூன்றாம் நபருக்கு இடமில்லை. கவிஞன் எனும் நிலையைத் தாண்டி, நிகழ்த்துனன் எனும் நிலையைத் தாண்டி பரம்பொருளின் வியாபகம் தன்னுள் நிறைத்துக்கொள்ளும் அதீத ஆட்கொள்ளுதல் மட்டுமே இப்பாடல்களை நமக்கு வழங்கியுள்ளதாக ராமானுஜன் தெரிவிக்கிறார். தருக்கம் சார்ந்த, மொழியியல் சார்ந்த காரணங்களை இவற்றுக்கு முன்வைக்கிறார்.
வேதம் மற்றும் வேதாந்தங்களின் சாரத்தை பிரபந்தங்களில் அளித்த பன்னிரு ஆழ்வார்களின் இருவர் மட்டுமே பிராமணர்கள்.  ஆழ்வார்களில் நான்கு வர்ணத்தினரும் இருந்திருக்கிறார்கள். வேதங்களும் அவற்றின் சாராமான வேதாந்தந்தங்களும் வாய்வழியாக பிராமணர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் கடைநிலையில் பிறந்த திருப்பாணாழ்வார் போன்ற ஆழ்வார்களும் வேதாந்த கருத்துகளும், வேதத்தின் சாரத்தையும் பாட்டில் புகுத்தியிருப்பதைப் பார்க்கும்போது, பக்திபாவத்தினால் `ஆட்கொள்ளுதல்` எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதினால் மட்டுமே சாத்தியம் என ராமானுஜன் சுட்டிக்காட்டுகிறார். சாமியாடிகளாக வெறியாட்டம் கொண்ட நிலையில் பரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்ட நிலையையும், அவர்களால் கைவிடப்பட்டு சாதாரண கவியாகிய நிலையும் மாறி மாறி வருவதால், ஆழ்வார்களின் காதல் ஒரு கணம் பக்தி பிரவாகமாகவும் மறு கணம் பிரிவின் ஆற்றாமை தரும் விரக தாபமாகவும் வெளிப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் கவித்துவ ஒருமையும், மொழிச் செறிவும் திட்டமிட்டு வருவதல்ல; தானாக நிகழும் ஒரு நிலை என விவரிக்கிறார்.
மொழியின் பிரயோகங்களைப் பற்றிப் பேசும் பகுதியில் ராமானுஜன் சங்கக் கவிதைகளில் எடுத்தாளப்படும் உருவகங்களுக்கும் பிரபந்தத்தில் வரும் உருவகங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனக் குறிப்பிடுகிறார். இதை உணர்த்துவதற்கு, குறுந்தொகைப் பாடல்களில் வெளிப்படும் மழை மற்றும் வனத்தின் நிலக் காட்சிகளையும் நம்மாழ்வார் பாசுரங்களில் எழில் சூழ் திருக்குருகூருக்கும் உள்ள ஒற்றுமையை விவரிக்கிறார். திருக்குருகூரில் (திருமாலிருஞ்சோலை)  வானை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் வயல்களும், முல்லை நிலக் காட்சியும் சங்கக் கவிதையில் காமத்தின் குறியீடாக விரகதாபத்தைக் காட்டுவதாக இருந்தாலும், திருவாய்மொழியில் அது பக்தி ரசமாக உன்னதமாக்கப்படுகிறது. தலைவன் மேல் தலைவிக்கு இருக்கும் காதல் அல்லது காமம் என்பது உன்னதப்படுத்தப்பட்ட நிலையில் `ஆட்கொள்ளப்படும்` உணர்வாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் சாமியாடி போல நம்மாழ்வாருக்குள் பரம்பொருள்  `இறங்கி` வெளிப்படுகிறார் எனும் நுண்ணிய வித்தியாசம் இங்கு உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

 
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
புன் புலம் அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புது மலர் முள் பயந்தாங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே
மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில், மனது மாறிய காதலனின் இருண்ட நெஞ்சத்தைக் கண்டு  நோகும் தலைவி முற்களாய் மாறிய நெருஞ்சி செடியை உதாரணம் காட்டுகிறாள்.
 அதே போல, கீழ்கண்ட பாசுரத்தில், தென் குருகூர் நகர் யானைகளின் செழுமைக்கு கண்ணனின் வருகை காரணமென்றும், அவை நோய் தீர்க்கும் மருந்து எனவும் நம்மாழ்வார் தெரிவிக்கிறார்.
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே.
பண்டைய குகை ஓவியங்களில் ஷாமன்(Shaman) எனும் சாமியாடி/வெறியாட்டம் ஆடுபவர்கள் பிரதானமாக இடம் பெற்றிருப்பார்கள். பிரபஞ்ச சக்தியைக் கட்டுப்படுத்தி தன்னுள் உறைய வைப்பதினால் மருத்துவராகவும், மனநலம் சார்ந்த சிக்கல்களைக் குணப்படுத்துபவராகவும் இவர்கள் இருந்திருக்கின்றனர். ராமானுஜன் நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்களை இப்படிப்பட்ட சாமியாடிகளாகவும், தன்னிலை மறந்து பிரபஞ்சகாரணனோடு இணைந்திருப்பவர்களாகவும் வகைப்படுத்துகிறார். அவ்வகையில், பாணர்/விரலி போன்று அன்றாட நிகழ்வுகளைப் பாடாமல்,  அலகிலா அனுபவத்தைத் தருபவையாக நம்மாழ்வார் பாசுரங்கள் அமைந்திருக்கின்றன.
வேதங்கள் ஒலி சம்பந்தமானவை, சங்கப் பாடல்கள் காட்சிபூர்வமானவை, நம்மாழ்வார் பாடல்கள் உணர்வு பூர்வமானவை. இதனாலேயே பிரத்யட்சம் எனும் நேர்க்காட்சி அனுபவத்தைத் தாண்டி, அனுமானத்துக்கு இடமில்லாமல், ஒலிகளால் அடையாத ஒரு உணர்வை பிரபந்தப் பாசுரங்கள் தெரிவிக்கின்றன என்கிறார் ஏ.கே.ராமானுஜன். இந்தியாவில் பக்தி காலகட்டத்தை முன்னடத்தியதில் ஆழ்வார்களின் பாசுரங்கள் முதன்மையானமை. பக்திபாவத்தைக் கைகொண்டு பிரபஞ்சத்தின் எல்லையில்லா ஆட்டத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியதும் பிரபந்தங்கள் தாம் என்கிறார்.
நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே
(1.1.4)
We here and that man, this man,
and that other in-between,
and that women, this women,
and the other, whoever,
 
those people, and these,
and these others in-between them,
this thing, and that thing,
and this other, in-between, whichever,
 
all things dying,these things,
those things, those others in-between,
good things, bad things,
things that were, that will be,
 
being all of them,
he stands there.
 
(1.1.4)
 
எப்படிபட்ட மொழியாக்கம்! பூடகமும், சொற்களுக்கிடையே உறையும் மெளனங்களும், பாட்டின் தாளமும், சந்தமும் மிகக் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.
ஏ.கே.ராமானுஜன் தமிழின் செழுமையான இலக்கியங்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் தெரியாதோர் புரிந்துகொள்ளக்கூடிய கலாச்சாரக் குறியீடுகளையும், பண்பாட்டுக் கதைகளையும் மிகச் செறிவாக ஆங்கிலத்துக்குக் கடத்தியுள்ளார். Interior Landscapes எனும் தலைப்பில் சங்கப் பாடல்களையும், Speaking of Siva எனும் தலைப்பில் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அறிமுகப்படுத்துவதோடு நில்லாது, உலகச் செம்மொழிகளின் பண்டைய இலக்கியங்களுக்கு நிகராகவும், பல சமயங்களில் மேலாகவும் நமது பண்பாட்டு கொடையைப் பகிர்ந்துள்ளார். அவ்விதத்தில் நமது சங்கப்பாடல்களையும், தத்துவங்களையும் தனித்தளத்தில் ஏற்றிவிட்ட பெருமை ஏ.கே.ராமானுஜன் அவர்களைச் சாரும்.
புத்தகம் - Nammalvar - Hymns for the Drowning
ஆசிரியர் - A.K.Ramanujan
பதிப்பாசிரியர் - Penguin
இணையத்தில் வாங்க - Nammalvar - Hymns for the Drowning
 
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...