A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

15 Dec 2012

பாரதியின் கண்ணன் பாட்டு

பாரதி பாட்டுல எதாவது ஒரு நாலுவரி சொல்லேன் என்று எதிரில் பார்ப்பவர் நால்வரைக் கேளுங்களேன் ("இல்லே நான் டமில் கூட்டி கூட்டிதான் வாசிக்கும்" என்பவராய் இல்லாது  நாலு வரியேனும் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஜீவன்களாய் அவர்கள் இருக்கட்டும்)

அவர்களில் மூவர் நிச்சயம் இதைப் பாடுவர்,
“பிறர்வாடப் பலசெயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்து..... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?..... இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்”
அதென்னவோ என்னத்தை சாதிக்கவில்லை என்றாலும், இந்தப்பாடலைப் பாடினால் வீறுகொண்டு எழும் ஆவேசம் வருவதாய் ஒரு தோற்றம் நம்மவர்களுக்கு.



நானுமொன்றும் விதிவிலக்கில்லை. எனக்கும் பாரதியின் பாடல்களைப் பட்டியலிடச் சொன்னால் இப்படித்தான் சினிமாவில் கேட்ட வசனங்களோ அல்லது பார்த்த/கேட்ட பாடல்களோ வந்து குதிக்கும்.

வருடந்தப்பாமல் முன்பெல்லாம் “This years resolution: I will read all Bharathiyaar Kavidhaigals this year" என்று டைரியின் முதலாம் பக்கத்தில் அடிக்கோடிட்டுக் குறித்துக் கொள்வேன். வழக்கமான ரெசொல்யூஷனாய் அதையும் எப்போதும் வருடக் கடேசியில் மறுமுறை ஒருமுறை புரட்டிப் பார்ப்பதோடு சரி. அது மீண்டும் அடுத்த வருடத்திற்கு c/f ஆகும்.

பாரதியார் கவிதைகள் புத்தகம் ஏதோ போட்டியில் கலந்து கொண்டு பரிசாய்க் கிடைக்க சின்னவயதில் ஒருமுறை அசுவாரசியமாய் பாஞ்சாலி சபதம் வாசித்த நினைவு.  மற்றபடி பாரதியார் எழுதிய சினிமாப் பாடல்கள் தவிர்த்து...... மன்னிக்கவும்.... பாரதியார் எழுதி சினிமாவில் வெளிவந்த பாடல்கள் தவிர்த்து வேறேதும் குறிப்பாய் வாசித்ததில்லை நான்.

ஆம்னிபஸ் பாரதி வாரத்திற்காய் கண்ணன் பாட்டு எடுத்து வாசித்தேன். இவற்றில் சில பாடல்கள் திரையில் / மேடைகளில் பாடப்பட்டவை / பாடப்படுபவையே. கண்ணன் பாட்டைப் பார்க்குமுன் இருவேறு கதைகளைப்  பார்ப்போமே!

சாவதாரம் படத்தில் கவிஞர் வாலி இயற்றி வெளிவந்த இந்தப் பாடலை சமகாலத்தில் வெளிவந்த நல்லதொரு கண்ணன் பாட்டு எனலாம். 
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்கு கிறேனேமயில் பீலி சூடி நிற்கும் - மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே - மணவாளனே!
முகுந்தா முகுந்தா...
ஆண்டாள் என்னும் கதாபாத்திரத்தில் வரும் நாயகி “பெருமாளே! பெருமாளே!” என்று படம் முழுக்கப் போடும் ஸீன்கள் வெகு ப்ரசித்தி. இது ஏதோ கற்பனைக் கதாபாத்திரம் என்று மட்டும் நினைத்திடாதீர்கள். நிஜவாழ்வில் ஒரு உதாரணம் சொல்கிறேன்....

ந்து வருடங்களுக்கு முன்னால் நான் வேலை பார்த்த டீமில் என் சக டீம்மெம்பர் ஒருவர், ”நான் கண்ணனை மணக்கப் பிறந்தவள்”, என்று சொல்லித் திரிவார். அதீத பக்தி அல்லது பித்து எப்படியும் சொல்லலாம். எங்கள் டீமில் “பெருமாள்” என்பதுவே நாங்கள் அவருக்கு இட்ட பெயர் . எப்போதும் “பெருமாளே! நாராயணா!” என்பதுதான் அவர் வாய் வார்த்தையாய் வெளிவரும். அவருக்கு ஆண்டாள் காதை வாசித்ததுவோ அல்லது மீரா புராணம் கேட்டதுவோ தன் மனதில் அவ்வாறு ஒரு சிந்தையை வளர்த்துக் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.

வேலை மாற்றமாகி அவர் வேறு கம்பெனிக்குப் போய்விட்ட நிலையில் , இரண்டு வருடங்கள் முன் தன் கல்யாண சேதியும் தேதியும் சொல்லத் தொலைபேசினபோது, “என் கண்ணன் கிடைத்துவிட்டார்”, என்றுதான் சொன்னார். கிடைத்தவரை கண்ணனாக நினைக்கவல்ல பக்குவத்தை அவருக்கு ஊட்டினவரைப் பாராட்டவேண்டும்.

”அரங்கனைத் தன் நாயகனாய் மனதில் கொண்டு அவனை இறுதியில் அடையவும் வல்ல பாக்கியம் கிடைக்க நானென்ன நிஜ ஆண்டாளா என்ன?”, என்பது அவர் சொன்ன கடைசி வாக்கியம்.

சரி, கண்ணன் பாட்டுக்குள் குதிப்போம் வாரீர்!

மகாகவி சுப்ரமணிய பாரதி கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசானாய், சீடனாய், குருவாய், குழந்தையாய், பிள்ளையாய், காதலனாய், காந்தனாய் (துணைவன்) என அனைத்துமாய் வரித்து எழுதிய பாடல்களின் தொகுப்பே கண்ணன் பாட்டு. இவற்றில் பெரும்பாலானவை திரையிலும், மேடைகளிலும் நாம் கேட்டு ரசித்தவைகளே. கண்ணன் பாட்டில் பாரதியாரின் பிரசித்தி பெற்ற கண்ணம்மா பாடல்களும் அடக்கம்.


ழ்வார்கள் பிரபந்தத்தில் கண்ணனைப் பிள்ளையாய்ப் நினைத்துப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் திருமொழியிலும் பிள்ளைத் தமிழிலும் உதாரணங்களை நாம் காணலாம். தன்னைக் காதலியாக வரித்துக் கொண்டு கண்ணனைக் காதலனாய் ஆழ்வார்கள் வரித்துப் பாடினதுவும் உண்டு. இவை பாரதிக்கு கண்ணன் பாட்டு எழுத இன்ஸ்பிரேஷனா என்று கேட்டால், இல்லை என்று தோன்றுகிறது. இப்படி ஒரு முடிவுக்கு நாம் வரும் காரணத்தைப் பின்னே பார்ப்போமே.

சேட்டை செய்யாத குழந்தை எந்த வீட்டிலும் உள்ளதா என்ன? விளையாட்டுப் பிள்ளைகள் சூழ்ந்த வீடுகளில் பெற்றவர்கள் பாடு எப்போதும் திண்டாட்டமே. வீட்டில் ஒரு பொருள் அதனிடத்தில் இராது. தின்ன நேரமின்றி, உறங்கப் பொழுதின்றி அந்தப் பிள்ளைகளிடம் இவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. எனினும் அந்தக் குழந்தைகள் என்றேனும் நலம்குன்றி சோர்ந்து அமர்ந்திருந்தால், “எந்திரிச்சு சேட்டை பண்ணுடா ராஜா. நீ இப்படி முடங்கிக் கிடக்கறது காணச் சகிக்கலை” என்று அந்தக் குழந்தையைக் கெஞ்சிக் கேட்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுப் பிள்ளையாய்க் கண்ணனை நமக்கு அறிமுகம் செய்கிறார் பாரதி. அவன் விஷமங்களைப் பட்டியலிடுகிறார், ரசனையோடு....
விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்       வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை       இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்.
தீராத விளையாட்டுப் பிள்ளை!
இப்படி அடுக்கடுக்காய்க் குற்றச்சாட்டுகள் அவன்மீது. ஸ்ருங்காரரசம்!

ண்ணம்மா - என் குழந்தை என்று “சின்னஞ்சிறு கிளியே” பாடும் பாரதி பராசக்தியைக் குழந்தையாய் பாவித்துப் பாடினதாம்.
கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கள்வெறி என்பது பருகப்பருகப் பெருகவல்ல போதை, இது குழந்தைக்கான முத்தமா என்ன என்ற கேள்வி நமக்குள் எழவே செய்கிறது. ஆக, இந்தப் பாடலை உங்கள் காதலிக்காகவும் பாடலாம் நீங்கள்.

”சுட்டும் விழிச்சுடர்தான்” மற்றும் “பாயுமொளி நீயெனக்கு” பாடல்களில் பாரதி கண்ணம்மாவிற்குச் சுட்டும் ஒவ்வொரு ஒப்புமையும் அவன் வழிவந்த ஆயிரம் கவிஞர்களுக்குக் கவிதைகள் சமைக்க உதவியிருக்கும் என்பது திண்ணம்.

நீங்கள் ஆயிரம்முறை படித்துக் களித்த உதாரணங்களைப் பாருங்கள்....

நீலக்கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி...கோலக்குயிலோசை உனது குரலினினிமையடி...
வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு....
சேவகனாய் கண்ணனைப் பற்றி பாடும் பாடல். “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்”, என்று இந்தப் பாடலினிடை வரும் வரிகளையும் தமிழ்த் திரையுலகு பயன்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலில் ஒரு முழுமை உள்ளது. முதலில் சேவகர்களின் பொல்லாத குணங்களைச் சொல்கிறார். அடுத்து இருந்துமென்ன, சேவகர்களில்லாது நம் வாழ்வில் ஏதும் சரியே வாராது என்கிறார். பின்னர் தனக்கு வாய்த்த சேவகனாம் கண்ணனை அறிமுகம் செய்கிறார். எதனையும் எதிர்பாராமல் அவன் தனக்குச் செய்யும் சேவகங்களைச் சொல்கிறார். நலமனைத்தும் நல்கிய அந்த நல்லவன்தனை நான் ஆட்கொண்டேன் என்கிறார் பாரதி.

இந்தப் பாடலை முழுசாய்த்தான் பாருங்களேன்.... எளிய தமிழிலேயே உள்ளதால் இதற்குப் பொழிப்புரை ஏதும் அவசியமில்லை.

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார். 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். 10

சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான், "இடைச்சாதி நான்" என்றான்;
"மாடு கன்றுமேய்த்திடுவேன்; மக்களைநான் காத்திடுவேன்; 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவாணர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்றவித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆனபொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்"
என்று பலசொல்லி நின்றான். "ஏதுபெயர் சொல்" என்றேன்
"ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை" என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்; 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
"மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு" கென்றென். "ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35

ஆன வயதிற் களவில்லை; தேவாணர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை" யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45

எண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50

பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோவந்தான் இடைச்சாதியென்று சொன்னான். 55

இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்தநாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே!
நாம் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றித்தான் பாரதி பாடுகிறார் என்று நினைக்கிறோம். ஆனால், பாரதியாரின் நண்பர் குவளை கிருஷ்ணன் பற்றினதுதான் இந்தப் பாடல் என்கிறாராம் செல்லம்மா.

இந்தப் பாடல்களிலெல்லாம் கவிஞனையும் அவன் கற்பனையையும் அவன் மொழிவளத்தையும் பாவன்மையையும் நாம் காணலாம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஓர் அற்புதத்தை வேறொரு பாடலில் பாரதியிடம் நாம் காண்போம்.....

ருவகை யோகப் பயிற்சி உண்டு. அந்த  யோகப் பயிற்சியின் நிறைவில் அந்த யோகத்தைப் பயிற்றுவிக்கும் ஆசான் உங்களை இந்த உலகின் ஒவ்வொரு அணுவினோடும் ஒன்றிப் போகும் வண்ணம் செய்வார். அதாவது, உலகின் முதல் அணு உடைந்து இரண்டாகி நான்காகி, மண்ணாகி, மலையாகி, ஒரு செல் உயிராகி, இரு செல் உயிராகி, மீனாகி, மானாகிப் பறவையாகி, மனிதனுமாகி என்று வளர்ந்தது இந்தப் பிரபஞ்சம். ஆக அந்த ஆதி அணுவின் துகளிலிருந்து வந்தவர்கள்தாம் நாம் ஒவ்வொருவரும். எனில், நாமனைவரும் ஒன்றன்றோ என்பதே அந்தப் பயிற்சியின் மூலம் சொல்லப்படும் தகவல்.

பயிற்சியின் நிறைவில் “ப்ராக்டிலக்ஸ் செஷன்” உண்டு. பயப்படாதீர்கள் அல்லது விபரீதமாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை ஒரு தோட்டத்தில், வெட்டவெளியில், மரங்களடர்ந்த சோலையில், பெரிய மைதானத்தில் என்று எங்கேனும் கொண்டு விடுவார்கள். அங்கிருக்கும் ஒரு பொருளை, மரத்தை, இலையை (சக மனிதர் தவிர்த்து) என்று ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தப் பொருளில் உங்களை நீங்கள் காணவேண்டும்.

மிகவும் உயர்நிலைப் பயிற்சி இது. இந்த நிலைமைக்கு (State'க்கு) உங்களைக் கொண்டு செல்ல அந்த குருவானவர் உங்களை ஒரு வார காலத்திற்கு முன்னமே தொடங்கித் தயார் செய்ய ஆரம்பிப்பார். படிப்படியாக ஒவ்வொரு பயிற்சியாக முடித்து நிறைவில் இந்த நிலையினை நீங்கள் அடைய முடியும்.

இந்தக் கண்ணன் பாடல்கள் தொகுப்பினில் இல்லாததொரு கண்ணன்  பாடலை இங்கே சொல்லவே நான் இந்த நெடிய யோக உதாரணத்தை இங்கே உள்ளே நுழைத்தேன்.
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”
எப்படிப்பட்ட ஒரு யோகநிலை!

இப்படிப் பாடினவனைத்தான் சென்னை ”மத்ய கைலாஷ் ஆலயம்”  பதிமூன்றாம் ஆழ்வார் எனக் கொண்டாடுகிறது. தவறா என்ன?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...